தேவனே தேவனே தேவனே இதயமே இதயமே இதயக் கோவிலில் வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவனே தேவனே தேவனே

இதயமே இதயமே இதயக் கோவிலில் வா

இமையும் விழியும் போலவே இணைந்து வாழ்வோம் வா

உந்தன் உறவு தருமே நிம்மதி

இறை அமைதி தரும் உன் சந்நிதி உயிரே உறவே வா


1. விழிகள் நீரில் நனையும் போது பாசக் குரலாய் வா

வினைகள் என்னை சூழும் போது விடியல் பொழுதாய் வா

சிறகை இழந்து தவிக்கும் நேரம் தாங்கும் கரமாய் வா

சின்ன இதயம் நொறுங்கும் நேரம் தேற்றும் தாயாய் வா

இறைவனே எந்தன் இதயமே இதயம் வாழும் ஜீவனே

வாழ்வின் சுனையே தேவனின் சுவையே வாழும் அன்பே வா

உறவின் பாதையிலே நிழலாய் தொடர்ந்திட வா

உயிரின் தேடலிலே உன்னைக் கண்டிட வா

இறைவனே இறைவனே தெய்வமே


2. துயரச் சுமைகள் துரத்தும் போது தாங்கும் விழுதாய் வா

கவலைக் கடலில் கலங்கும் போது காக்கும் படகாய் வா

வெறுமைத் தீயில் வேகும் நேரம் அருளின் மழையாய் வா

இருளின் பிடியில் இறுகும் நேரம் உயிரின் ஒளியாய் வா

கடவுளே உயர் கலைஞனே கருணைக் கடலே தெய்வமே

சிறகின் நிழலில் சிலுவை ஒளியில் காக்கும் திருவே வா

அன்பின் வடிவே வா அருளின் நிறைவே வா

பண்பின் உருவே வா பாசக் கடலே வா

இறைவனே தேவனே தெய்வமே