இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா எழுந்து வா என்னில் நிலைக்க வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா

எழுந்து வா என்னில் நிலைக்க வா

இயேசுவே என் இறைவா இயேசுவே என் தலைவா

எழுந்தே வருவீர் என்னோடு தங்குவீர்

என்றுமே உம்மில் நிலைத்திட செய்குவீர்


1. நானே உயிர்தரும் உணவு என்றீர் நாதனே வந்தருள்வீர்

நான் தரும் உணவை உண்பவனோ

என்றுமே வாழ்வான் என்றீர்


2. கிறிஸ்துவின் ஆவியை கொண்டிராதவன்

கிறிஸ்தவனே அல்லன் கிறிஸ்துவே உம் தூய

ஆவியையே என்னில் பொழிந்திடுமே