தெய்வதரிசனம் தேடும் மனம் தினம் தேவன் வரவிலே ஜீவன் உருகிடும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தெய்வதரிசனம் தேடும் மனம் தினம்

தேவன் வரவிலே ஜீவன் உருகிடும்

இதைப் பாடாத நாளில்லையே

இதைத் தேடாமல் வாழ்வில்லையே

இறைவா இறைவா என் இதயம் இணைவாய்


1. வாழ்வு வழங்கும் வல்ல தேவன் வரவு என்னிலே

வசந்தம் என்றும் வசந்தம் எந்தன் வாழ்வு தன்னிலே

வானதேவன் வார்த்தை இங்கு வடிவம் ஆனதே

வானும் மண்ணும் அழிந்த பின்னும் வாழும் என்னிலே

ஒளியே ஒளியே உலகின் ஒளியே

உயிரே உயிரே உயிரின் உயிரே


2. அன்பிற்காக ஏங்கும் எந்தன் ஆசை ஓய்ந்திடும்

அழிவில்லாத அன்பின் நேசம் அரவணைத்திடும்

நினைவில் ஆடும் நிழல்கள் யாவும் நிஜங்களாகிடும்

நீங்கிடாமல் நிறைவின் நேசம் நிதமும் தொடர்ந்திடும்