நட்ட நடு சாமத்துல கொட்டும் பனி வேளயில
ஆண்டவனின் சம்மனச பார்த்தாங்க
இடையர் பார்த்தாங்க
திட்டப்படி தேவமகன் பட்டுப்போன உலகத்திலே
மொட்டுப்போல மலர்ந்த செய்தி கேட்டாங்க
பாட்டும் கேட்டாங்க
உன்னதத்தில் மகிமை தேவனுக்கு
மண்ணகத்தில் அமைதி மனுசனுக்கு
1. ஆட்டுக்குட்டிய தூக்கிக்கிட்டு
நெய்யும் பாலும்தான் எடுத்துக்கிட்டு
கட்டுச்சோறும் தான் கட்டிக்கிட்டு
பெத்லஹேம் ஊருக்குப் போனாங்களே
கொட்டகையில் கிடந்த முன் கட்டிலில்
இயேசு பாலகனை எட்டி பார்த்தாங்களே
விட்டுப் போன சொந்த பந்தமெல்லாம்
சாமி வந்ததுன்னு தொட்டு கும்பிட்டாங்களே
வாருங்க நீங்களும் வாருங்களே
வாழ்விக்கும் பாலனை பாருங்களே
கூடுங்க ஒன்றாகக் கூடுங்களே
கும்பிட்டு கும்மாளம் போடுங்களே
2. வானத்தில் விண்மீனைப் பார்த்துக்கிட்டு
மெசியா பொறந்தத தெரிஞ்சிக்கிட்டு
ஞானிகள் மூணுபேர் சேர்ந்துக்கிட்டு
விண்மீனு பின்னாடி போனாங்களே
ஏழைகளின் சூழ எல்லாருக்கும்
ஏழ்மையில் கிடப்பத பார்த்தாங்களே
எடுத்து வந்த தங்கம் வைரம் தூபம் தந்து
வேந்தனின் பொற்பாதம் பணிந்தாங்களே
வாருங்க நீங்களும் வாருங்களே
வாழ்த்துகள் சொல்லியே பாடுங்களே
பாருங்க உங்கள பாருங்களே
தந்தான தானன்னே பாடுங்களே
உன்னதத்தில் மகிமை தேவனுக்கே
மண்ணகத்தில் அமைதி மாந்தருக்கு