தாய்மடி மண்ணில் தங்கநிலா பொழிந்தது ஆகாயம் தேன்மழை


தாய்மடி மண்ணில் தங்கநிலா

பொழிந்தது ஆகாயம் தேன்மழை

துளித்துளி பனித்துளியாய்

தாய்மடி மண்ணில் தங்கநிலா

பொழிந்தது ஆகாயம் தேன்மழையாய்

தாவீது இராஜனின் குலம் தந்த ஜீவனே

தரையினில் பூத்தது அதிசயமே

தாவீது இராஜனின் குலம் தந்த ஜீவனே

தரையினில் பூத்தது அதிசய அறிமுக தரிசனமே


1. மாமரி கனாவில் செய்தி மலர்ந்தது கருவில் ஜோதி

தவித்தது உயிரில் பாதி சுகம் சுமந்தாள்

தீவிரல் தொடாத தங்கம் திருமகன் பூவின் அங்கம்

மானுட வேதம் தன்னை ஈன்றெடுத்தாள்

மாநிலம் இன்பம் பொங்க ஈன்றிடும் பரவசப் பரிசிதுவே


2. பாலகன் விழாத மின்னல் படர்ந்தது பளிங்குப் பந்தல்

அசைந்தது அழகுத் தென்றல் பரம்பொருளோ

வானகம் தராத இன்பம் வளர்பிறை வடிவில் இன்று

ஆவினம் தங்கும் கொட்டில் அரண்மனையோ

முன்னணை புல்லின் மேலே அரியணை குறுநகை நறுமணமோ