ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும் உன் அன்புக்கு எல்லை இல்லை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு வழி அடைத்தால் மறு வழி திறக்கும்

உன் அன்புக்கு எல்லை இல்லை

ஒரு கணம் பிரியா உன் உடன் இருப்பை

நினைத்திருந்தால் நெஞ்சில் தொல்லை இல்லை

இயேசுவே நீரே என் வலிமை இயேசுவே நீரே என் ஆற்றல்

இயேசுவே நீரே என் விருப்பம் இயேசுவே நீரே என் இறைவன்


1. நீர் மட்டும் மௌனமாய் இருந்திருந்தால்

என்றோ நான் படுகுழி சென்றிருப்பேன்

சோகங்கள் எனைச் சூழ்ந்த போதும்

வேதனை நான் சுமந்தாலும்

என் இயேசு நீர் மட்டும் என் துணை

உன் உறவுக்கு ஈடாக ஏது இணை


2. எனக்கெதிராய் ஒரு படை வரினும்

என் உள்ளம் அஞ்சாது அசராது

நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பதேன்

ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்

வலக்கரம் நீட்டியே உனைத் தொடுவார்

வாழ்ந்திடு என்பாரே நம் கடவுள்