நான் மீட்டும் இராகம் உனக்காகத்தானே உன் அன்பை பாடிடத்தான் எங்கே நீ என் அன்பே உனைப் பாடத் துடிக்கின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் மீட்டும் இராகம் உனக்காகத்தானே உன் அன்பை பாடிடத்தான்

எங்கே நீ என் அன்பே உனைப் பாடத் துடிக்கின்றேன்


1. காற்றினில் அசையும் நாணல்களில் - உன்

அசைவினை நான் காண்கின்றேன்

கடலினில் வீசும் அலைகளிலே - உன்

தரிசனம் பெறுகின்றேன்

பூக்களும் கவிதை கூறுமோ உன் புகழ் சொல்லுமோ

உனக்காய் ஏங்கும் என் மனதை குயில்கள் பாடுமோ

உன்னோடு நான் வாழும் நன்னாளை எதிர்நோக்கி

என் இயேசுவே ஆசை தீரப் பாடுவேன்


2. மனதினில் நீ எழும் அழகினைக் கண்டதும்

என்னையே மறந்து விட்டேன்

நயமுறு தோரணம் உனக்காய் அமைத்தே

அன்புடன் கும்பிடுவேன்

பளிங்கு மாளிகை ஒளியிழக்கும் உன்னைக் கண்டாலே

தென்றல் கூட மெய் சிலிர்க்கும் உன் கால் பட்டாலே

திசையெங்கும் உன் நாமம் தேனாக சுவைத்திட

என் இயேசுவே ஆசை தீரப் பாடுவேன்


3. உனக்கென வாழும் ஒவ்வொரு பொழுதும்

உயிருடன் நான் வாழ்கிறேன்

உறவினை வளர்க்கும் உணர்வினைப் பெற்றேன்

உயர்வினை அடைகின்றேன்

என்னுயிர் நீ என எண்ணுகிறேன் எந்தன் ஆருயிரே

தோன்றிடும் நினைவில் உன் உருவை என்றும் தாங்குகிறேன்

நிதம் உந்தன் கரம் பற்றி எங்கும் நடந்திடவே

என் ஜீவனே ஆசை தீரப் பாடுவேன்