நான் கண்ட தெய்வம் நீயல்லவா என் உள்ளம் கவர்ந்ததும் உனையல்லவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் கண்ட தெய்வம் நீயல்லவா

என் உள்ளம் கவர்ந்ததும் உனையல்லவா

நான் பாடும் பாடல் உனக்கல்லவா

என் வாழ்வின் பொழுதெல்லாம் நீயாக வா


1. கனிவான இதயம் உனதல்லவா

இனிதாகப் பேசும் உன் மனமல்லவா

இரக்கத்தைப் பொழிவதுன் குணமல்லவா

மறவாது ஈவதுன் கரமல்லவா


2. பாவத்தால் பலதூரம் சென்றாலும் - உன்

பாசத்தால் பாவியை வென்றாயே நீ

பரிசுத்த உமது திரு இரத்தத்தால்

பரிசுத்த படைப்பாக உருவாக்கினாய்