அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடன் நிதம் வாழ்க

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அருள்நிறை மரியே வாழ்க

ஆண்டவர் உம்முடன் நிதம் வாழ்க

பேறுடைப் பெண்ணே நீ வாழ்க

மனுக்குலப் பெருமையே நிதம் வாழ்க

தேடி வந்தோம் தாய்மரியே கோடி நன்மை புரிபவளேதேடி

நன்றி கூற நாடிவந்தோம் கண்ணீர் பெருக பாடிநின்றோம்

கண்ணீர் பெருக நாடி நின்றோம்


1. அன்புக் கடலாய் நீயிருக்க

அருளின் கரையாய் உன் மகனிருக்க (2)

வாழ்வுத் தோணிகள் பயணம் வரும் - 2

விண்ணக வாழ்வின் கரை சேரும் - 2


2. இத்தனை ஆண்டு காலங்களாய் இறைவன் ஆசீர் பெருகியது -2

தாயைத் தந்த இறைவா வாழி -2 தாயின் அன்பு தினமும் வாழி -2