நற்கருணை நாதரை உட்கொண்டபின் சொல்லக்கூடிய முக்கியமான ஜெபங்கள்!

1. பரிபூரண பலனைத்தரும் ஜெபம் : என் தேவனாகிய ஆண்டவரே ! எவ்வகையான மரணத்தை எனக்கு அனுப்ப உமக்கு சித்தமோ, அம்மரணத்தையும் அதைச் சேர்ந்த துக்க துயர வேதனை நோக்காடுகளோடு கூட, இதோ இக்கணமே உமது கரத்திலிருந்து சமாதானத்தோடும், முழு மன சம்மதத்தோடும் ஏற்றுக்கொள்கிறேன்... ஆமென்.

(பரிபூரண பலன் என்றால் நாம் இன்றுவரை செய்த பாவத்திற்கு உண்டான தண்டனை முழுவதும் ரத்தாகிவிடுதலே பரிபூரண பலன் என்பது. அதற்காக பாவசங்கீர்த்தனம் செய்யாது இருத்தல் கடவுளுக்கு எதிரானது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். அதுபோல நன்மை வாங்கியதும் மேலே உள்ள ஜெபத்தை சொல்ல வேண்டும்)

2. இரண்டாவது ஜெபம் ( வானதூதர் பாத்திமா சிறுமிகளுக்கு கி.பி.1916-ல் கற்றுக்கொடுத்த ஜெபம்) :

“ என் தேவனே! நான் உம்மை விசுவசிக்கிறேன், நான் உம்மை ஆராதிக்கிறேன், நான் உம்மை நம்புகிறேன், நான் உம்மை நேசிக்கிறேன். உம்மை விசுவசியாதவர்க்காகவும், உம்மை ஆராதிக்காதவர்க்காகவும், உம்மை நம்பாதவர்காகவும் உம்மை நேசியாதவர்க்காகவும் மன்னிப்பு கேட்கிறேன் “

மூன்றாவது நாம் ஜெபிக்க வேண்டிய ஜெபங்கள்: கிறிஸ்துவின் ஆத்மமே ஜெபம். மனவல்ய ஜெபங்கள், அவருக்கு நன்றி கூறுதல். நம் மனதில் உள்ளதை கொட்டுதல், நற்கருணை நாதரிடம் அன்போடும், உரிமையோடும் நம் தேவைகளை கேட்டல், அவரை கொஞ்சுதல்..அவரிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசுதல்.. இன்னும் நமக்கு விருப்பமான முறையில் அவரிடம் பேசுதல்.

இவை அனைத்தும் நம் ஆண்டவரை நாம் பெற்றபின் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களாவது நடைபெறவேண்டியவை..

அதை விட்டுவிட்டு பக்கத்தில் இருப்பவரிடம் பேசுதல்; கரங்களை தட்டிக்கொண்டும்; வேடிக்கை பார்த்துக்கொண்டும் சிரித்து கொண்டும் இருத்தல் என்று இருப்பவர்களுக்கு சாபம் வந்து சேரும்.. நமக்குத்தேவை.. ஆசீர்வாதமா? சாபமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

(இது தவிர நற்கருணை நாதரை வாங்கும் போது அவசங்கை இல்லாமல் பக்தியோடு நாவில் பெற வேண்டும்)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !