கத்தொலிக்க கிறிஸ்தவர்களுக்கு சிலுவைகள் ஏன் அதிகம்?

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “ லூக்காஸ் 9 : 23

“ தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது “ லூக்காஸ் 14 : 27

நம் இயேசு தெய்வம் சொல்லிய சிலுவையும் இதுதான். நம் பரிசுத்தமாதா நம்மிடம் தன் காட்சிகளில்(குறிப்பாக பாத்திமா மற்றும் லூர்து) கேட்கும் ஜெபம், தவம், பரிகாரம் இவற்றில் மூன்றாவதாக வரும் பரிகாரமும் இந்த சிலுவைகள்தான். அந்த சிலுவைகளை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் கண்டுபிடித்து விட்டால் கண்டிப்பாக அவருக்கு மோட்சம் உண்டு..

நமக்கு வரும் கஷ்ட்டங்கள், துன்பங்கள், நோய்கள், இடையூறுகளை நமது பாங்களுக்காகவும், பிறரின் பாவங்களுக்காகவும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.. தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் அல்லது வேறு எந்த நோய்வந்தாலும் மருத்துவம் பார்க்கவேண்டும். ஆனால் குணமாகும்வரை உள்ள வேதனைகளை நாம் பரிகாரமாக மாற்ற வேண்டும்.

அதுவே நம்முடைய பாவத்திற்கு பரிகாரமாக கடவுள் கொடுக்கும் அன்றாட சிலுவைகள்.

‘கரீஸ்மெட்டிக்’ ஜெபங்கள் நம் அன்றாட சிலுவைகளை பறிக்கின்றன. இதனால் நாம் மோட்சம் போகும் வழிகள் அடைபடுகின்றன.

எப்போதும் சவுகரிகமாக இருந்த பணக்காரன் நரகம் சென்றான். தன் வாழ்நாள் முழுக்க துன்பம் மட்டுமே அனுபவித்த ஏழை லாசர். மோட்சம் சென்று பிதாவின் மடியில் வீற்றிருந்தான்.

நல்ல கள்ளன் தான் செய்த தப்பிற்கு அவனுக்கு கிடைத்த சிலுவை மரணத்தை “ நாம் தண்டிக்கப்படுவது முறையே “ என்று ஏற்றுக்கொண்ட்தால் இயேசு அவனுக்கு “ இன்றே நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய் “ என்று சொல்லி அவனுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறார்.

தன் சொத்தை எழுதி வாங்கி நண்பர்களோடு குடித்து விபச்சாரிகளோடு திரிந்த இளைய மகன் பசி, பஞ்சம், பன்றி மேய்க்கும் வேலை, பன்றிக்கு வைத்த தவிட்டை உண்ணுதல் என்ற பரிகாரத்தை செய்ததால் அவர் தந்தை அவனை மன்னித்து ஏற்றுகொண்டார்.

ஆக பாவத்திற்கு பாவசங்கீர்த்தனம் மூலமாக மன்னிப்பு உண்டு. அவனுக்கு நரகம் இல்லை. மோட்சமும் இல்லை. ஆனால் உத்தரிக்கும் ஸ்தலம் கண்டிப்பாக உண்டு. நாம் இங்கு வாழும்போதே செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துவிட்டால் நமக்கு நேரிடையாக மோட்சம் உண்டு.

நமது அன்றாட வேலை, அதிக வெயில், மழை, குளிர், பஸ் நெரிசல், பவர் கட், கால்வலி, தலை வலி, சமையல், இன்னல்கள், இடையூறுகள், நோய்கள் எல்லாமே சிலுவைகள்தான்.

இந்த கரீஸ்மெட்டிக் ஜெபமுறைகளால் சந்தோசம், மகிழ்ச்சி என்று சொல்லி கடவுள் நமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை இவர்கள் பறித்துவிடுவதால்தான் அது கூடாது என்கிறோம். மேலும் அப்படியே கடவுள் நமக்கு சுகமளிக்க விரும்பினால் பக்தியோடும், விசுவாசத்தோடும் நம் பங்கு ஆலய திருப்பலிகளில் கலந்து கொண்டாலே நமக்கு சுகத்தையும் ஆசீரையும் நிரம்ப கொடுப்பார்.

அதற்காக நோய்கள் தீர ஜெபிக்ககூடாது என்பதல்ல.. எத்தனையோ கத்தோலிக்கர்கள்..நற்கருணை நாதரிடமும், மாதாவிடமும், தங்கள் புனிதர்களிடமும் மனமுறுகி வேண்டி எத்தனையோ குணங்கள், ஆசீரைப்பெற்றுள்ளார்கள்..

சிலுவைகள் நமக்கு நன்மை தருகிறது..

கரீஸ்மெட்டிக் வழிபாட்டு முறையில் இன்னொரு முக்கியமான பிரச்சனை உள்ளது..அதை அடுத்து வரும் பதிவில் சொல்கிறேன்

இது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. உண்மையை கூறும் நோக்கம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !