♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னுயிரே என் இறைவா
என்னையே நான் உமக்குத் தந்தேன்
என் மகிழ்வே என் தலைவா
திருவடி பணிந்தே தொழுது வந்தேன் (2)
இறைவா ஏற்பாய் - 4
1. வறுமையில் வாடிய ஏழைத் தாயோ
தனக்கென இருந்த யாவையும் தந்தார் (2)
உள்ளத்தைக் காணும் உன்னத இறைவா
எனக்கென இருப்பதை உம்மிடம் தருகின்றேன் (2) இறைவா...
2. கலப்பில்லா உணவும் உயரிய தரமும்
முழுமையுமான நறுமணத் தைலம் (2)
காலடி ஊன்றிய பெண்மணி போல
கனிவுடன் கண்டேன் காணிக்கை ஏற்றிடுவாய் (2) இறைவா...