அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணமே நிதமும் நிதமும் அர்ப்பணமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணமே

நிதமும் நிதமும் அர்ப்பணமே (2)

இயேசுவே எம்மையே முழுதும் உமக்கே அர்ப்பணமே


1. பணிவாழ்வுப் பயணத் தடைகளை

பணிவோடு உன் பாதம் படைக்கின்றோம் (2)

திக்கற்றோர் வாழ்வில் திசையாய் நின்றிட

தினமும் தருகின்றோம் எம்மை உமக்கே தருகின்றோம்


2. உயர்வு தாழ்வு நீங்கிட உன்னத பணிக்காய்த் தருகின்றோம் -2

உமது வாழ்வில் சாட்சியாய் வாழ்ந்திட உவந்து தருகின்றோம்

எம்மை உமக்கே தருகின்றோம்