அடியோர் யாம் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அடியோர் யாம் தரும் காணிக்கையை

அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே (2)


1. பாவியென்றெம்மைப் பாராமல்

பாவத்தின் தீமையை அடையாமல் (2)

பரிகாரம் என ஏற்றிடுவாய்

பலியாய் எமை நீ மாற்றிடுவாய்


2. வாழ்வுக்கு ஒருநாள் முடிவு உண்டு - விண்

வாழ்வுக்கு எமக்கென்று எது உண்டு (2)

என் மனம் அறிந்ததன் பயன் என்னவோ

எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ