பொன்னும் போளமும் என்னிடமில்லை என்னையே உமக்குத் தருகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பொன்னும் போளமும் என்னிடமில்லை

என்னையே உமக்குத் தருகின்றேன் (2)

அப்பமும் இரசமும் கொண்டுவந்தேன் -2

என் ஆன்மீக உணவாய் மாற்றிடுவாய்

ஏற்றிடுவாய் எம்மை ஏற்றிடுவாய்

இயேசுவின் உருவாய் மாற்றிடுவாய் (2)


1. உழைப்பின் பயனாம் அப்பம் இதோ

ஏழைகள் வாழ்ந்திட வளம் தருமே

சிந்திடும் கண்ணீர் கிண்ணத்திலே அதை

திராட்சை இரசமாய் தருகின்றேன்

துயருறும் மாந்தர் உயர்ந்திடவே

தூயவா தயவாய் ஏற்றிடுவாய் - ஏற்றிடுவாய்...


2. அன்பில்லா உலகில் அன்புறவை

அமைத்திடவே நான் உழைத்திடுவேன்

துன்புறும் சோதரர் சுகம் பெறவே - அவர்

சுமைகளை நானும் சுமந்திடுவேன்

சிந்திடும் கண்ணீர் துடைத்திடவே

புதியதோர் உலகம் அமைந்திடுமே - ஏற்றிடுவாய்...