இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக

இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக

நினைத்தேன் நினைத்தேன் நான் தர

அனைத்தும் உந்தன் காணிக்கை (2) என்


1. பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு

காய்த்து கனிந்த கனிகளும்

ஓங்கி உயர்ந்த மரங்களும் அதைச்

சூழ்ந்து வளர்ந்த செடிகளும்

இயற்கை கூறும் கவிதைகள் யாவும்

இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்...


2. பறந்து திரியும் பறவைகள் அவை

பாடும் கடல்வாழ் விலங்குகள்

காற்றும் கடலும் கார்முகில் வான

வில்லும் நிலவும் விண்மீன்களும்

இயற்கை கூறும் கவிதைகள் யாவும்

இறைவன் தந்த கொடைகளே (2) - நினைத்தேன்...