வருகின்றேன் பலியாய் என்னை தினமும் அளிக்க வருகின்றேன் தருகின்றேன் மெழுகாய் என்னை நிதமும் உருக்கித் தருகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வருகின்றேன் பலியாய் என்னை

தினமும் அளிக்க வருகின்றேன்

தருகின்றேன் மெழுகாய் என்னை

நிதமும் உருக்கித் தருகின்றேன்

நெகிழ்கின்றேன் உந்தன் அன்பில்

திளைக்கின்றேன் உந்தன் அணைப்பில்

விரைகின்றேன் உந்தன் நேசம் சுவைக்கவே

கரைகின்றேன் உந்தன் பணியில் நாளுமே


1. எளியோர் வாழ இளையோர் வளர

என்னைத் தந்தேன் தெய்வமே

இருளை அகற்றி ஒளியை ஏற்ற உந்தன் சுடராய் மாற்றுமே

விடியல் தேடும் விழிகளில் வழியை நாளும் காட்டிட

உரிமை இழந்த கரங்களில் நீதியை நிலைநாட்டிட

வலிமை இழந்த நலிந்தோர் மெலிந்தோர்

உந்தன் தோளாய் மாறிட


2. வறிய மாந்தர் விழிநீர் துடைத்து

உந்தன் சாட்சியாய் வாழ்ந்திட

அடிமைத் தளையை உடைத்து எறிந்து

சமத்துவம் நிலைநாட்டிட

அன்பை இழந்த உறவினை உயிர்கொடுத்துக் காத்திட

கல்வி அறியா கண்களில் அறிவுச் சுடரை ஏற்றிட

விளிம்பில் தவிப்போர் விடியல் காண

உடனிருந்து உழைத்திட