வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் என் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

என் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம்

அன்பாய் ஏற்றிடுவாய்


1. இறைவா உம்மில் இணையா வாழ்வு

இருந்தும் பயனென்ன ஆ (2)

இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால் எனக்கு இழப்பென்ன

இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் -3


2. இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னைத் தேடுதே ஆ (2)

உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே

உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து

இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் - 3