பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பாவியான என்னையே ஏற்றுக்கொள்ளும் இறைவனே-2

கருணைக் கடலும் நீ காக்கும் தலைவனும் நீ - 2


1. இதயம் எல்லாம் இருப்பவன்

என் இருளைப் போக்கும் இனியவன்

வானம் பூமி எங்கிலும் நிறைந்து வாழும் தூயவன்

கடலைப் பிரியா அலையைப் போல

உன்னுள் வாழ எனைத் தந்தேன் (2)


2. காலைக் கதிரின் இனிமை போல்

கிருபை பொழியும் தேவா வா

காற்றும் மழையும் மாறலாம் உன் கனிந்த அன்பு மாறுமோ

பொன்னும் பொருளும் இல்லை இறைவா

எனையே தந்தேன் ஏற்பாயே (2)