பரிசுத்த வாழ்க்கையில் வாழ்வதற்கு என் சக்தி எனக்கு போதவில்லை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பரிசுத்த வாழ்க்கையில் வாழ்வதற்கு

என் சக்தி எனக்கு போதவில்லை (2)

மீண்டும் மீண்டும் விழாமல் இருக்க

உன் ஆவியின் வரங்கள் வேண்டுமையா (2)

பரிசுத்தனே பரிசுத்தனே - 2

பரிசுத்த நதியில் எனை நனைத்திடுவாய்

பரிசுத்த குருதியில் எனைக் கழுவிடுவாய் (2)


1. எம் வாழ்வின் செல்வங்கள் நிலைத்து இருக்குமா

எம் வாழ்வின் உறவுகள் என்னை இரட்சிக்குமா (2)

எத்தனை செல்வங்கள் நான் சம்பாதித்தும்

என் ஆன்மா இழந்தால் என்ன இலாபம் (2)

பரிசுத்தனே பரிசுத்தனே...


2. எம் வாழ்வில் கீர்த்தி நிலைத்து தொடருமா

எம் வாழ்வின் மேன்மை என்னுடன் நீடிக்குமா (2)

உன் அன்பு மாத்திரம் எனக்கிருந்தால்

எந்நாளும் வாழ்வேன் உன்னோடு தான் (2)

பரிசுத்தனே பரிசுத்தனே...