நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில் நிலையாக வாழ்வேன் ஆசையிலே நீயே என் கோயில் நானோ உன் சாயல்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீயே என் கோயில் ஆண்டவனே - உன்னில்

நிலையாக வாழ்வேன் ஆசையிலே

நீயே என் கோயில் நானோ உன் சாயல்

உனைப் போல வாழ்வேன் ஆசையிலே

நீயே என் கோயில் நீயே என் தெய்வம்

நீயே என் கோயில் ஆண்டவனே (2)


1. வார்த்தையின் வடிவில் உனைப் பார்க்கிறேன்

வாழ்க்கையின் வழியெங்கும் உனைப் பார்க்கிறேன்

செயலுள்ள நம்பிக்கையில் உனைப் பார்க்கிறேன்

வாழ்க்கையே வழிபாடாய் உனைப் பார்க்கிறேன்

புதுமையின் பொலிவினிலே உனைப் பார்க்கிறேன் - 2

உருவ அருவங்களில் உனைப் பார்க்கிறேன் - நீயே...


2. பேழையின் பிரசன்னத்தில் உனைப் பார்க்கிறேன்

உயிருள்ள வசனத்தில் உனைப் பார்க்கிறேன்

மண்ணில் மனிதரிலே உனைப் பார்க்கிறேன்

தாய்மையின் நேசத்திலே உனைப் பார்க்கிறேன்

நண்பரின் தியாகத்திலே உனைப் பார்க்கிறேன் -2

இயற்கையின் இயல்பினிலே உனைப் பார்க்கிறேன் - நீயே ...