ஓ இயேசுவே எம் சிநேக தேவே ஓ தேவுலகோர் அப்பமே


ஓ இயேசுவே எம் சிநேக தேவே

ஓ தேவுலகோர் அப்பமே - எம்

ஆன்மாவின் வீவகற்ற எம்மில்

அன்போடெ ழுந்தருளுவீரே


1. வாரும் எம்மில் ஓ நேச இயேசுவே

வல்லப நாதி நாதனே

பாரும் விண்ணும் பரவும் தூயனே

பாவியெம் பாவம் நோக்கிடாதீர்

வாரும் எம்மில் ஓ இயேசுவே


2. தேவே உமை மறைந்தலைந்து

பாவச் சுமையாலே நலிந்து

வந்தோம் உமது சந்நிதியே

அன்போடெ ழுந்தருளுவீரே


3. என் மாம்சம் உண்டென் செந்நீரையே

வண்ணாகாரமாக அருந்தும்

அந்நாளில் யான் வசிப்பேன் என்றீர்

அன்போடெ ழுந்தருளுவீரே