அனைத்தையும் படைத்த தந்தையின்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அனைத்தையும் படைத்த தந்தையின் அன்பே

நமக்குத்துணை நமக்குத்துணை

அன்பும் உண்மையும் ஆகிய அவரே - நமக்குத்துணை -2

கண்மணிபோல் நம்மைக் காக்கும் அவரே - நமக்குத்துணை -2

கலங்காதே என்று தேற்றும் அவரே - நமக்குத்துணை-2

அவர் வாழுகின்ற தந்தை நிறைவாஞ்சையான நம் தந்தை -2


1. யாவையும் காக்கும் மாண்புயர் தெய்வம் - நமக்குத்துணை -2

காலங்கள் தோறும் வாழ்ந்திடும் தெய்வம் - நமக்குத்துணை -2

வாழ்வினைக் காட்டும் வழியும் அவரே - நமக்குத்துணை -2

வறுமையைப் போக்கும் வளமையும் அவரே - நமக்குத்துணை-2

அவர் வாழுகின்ற தந்தை நிறைவாஞ்சையான நம் தந்தை - 2


2. நீதியைக் காக்கும் நேரிய தெய்வம் - நமக்குத்துணை -2

மேதினில்யாவையும் மீட்கின்ற தெய்வம் - நமக்குத்துணை -2

ஆயிரம் வழிகளில் அருகினில் இருப்பார் - நமக்குத்துணை -2

அல்லல்கள் நீக்கி அரவணைத்திடுவார் - நமக்குத்துணை -2

அவர் வாழுகின்ற தந்தை நிறைவாஞ்சையான நம் தந்தை -2