என் அன்பு இயேசுவே அருகில் இருப்பாய் என் அன்பு தெய்வமே அமைதி தருவாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என் அன்பு இயேசுவே அருகில் இருப்பாய்

என் அன்பு தெய்வமே அமைதி தருவாய் (2)

என் இயேசுவே என் அன்பரே என் இயேசுவே என் தெய்வமே (2)


1. இறைவனே உன் வார்த்தையால்

இயேசுவே உன் அன்பினால் வாழ விழைகிறேன்

ஆவியின் வரங்களால்

ஆற்றலின் செயல்களால் என்னை நிரப்புமே (2)

இயேசுவே தெய்வமே ஆற்றல் தாருமே

இயேசுவே தெய்வமே அருளால் நிரப்புமே - என் இயேசுவே ... ...


2. தந்தையே உன் வழியிலே

இயேசுவே உன் ஒளியினில் உலகை காண்கிறேன்

உண்மையில் நீதியில்

சாட்சியாய் என்னையும் வாழச் செய்யுமே (2)

உண்மை தேவனே உன்னருள் தாருமே

நீதியின் ராஜனே ஆற்றல் தாருமே - என் இயேசுவே ... ...