இறை வழிபாடும் சிலை வழிபாடும்!

இறைவழிபாடு என்றால் பிதா சுதன் பரிசுத்த ஆவியை உள்ளதில் தாங்கி அவர்களுக்கு சிந்தனையால் சொல்லால் செயலால் வழிபாடு செய்வது. பாவம் செய்யாமல் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்து நம் சகோதர சகோதரிகளை நேசித்து இறைவனுக்கு என்றும் பிரமானிக்கமாய் இருப்பது.

சிலை வழிபாடு என்றால் பொய், பொறாமை, பகைமை,கெட்ட நடத்தை, கோபாம், காமம், இன்னும் பல தீமைகளை உள்ளத்தில் அவற்றிற்கு வழிபாடு செய்தல். அதாவது இறைவனை வழிபடாமல் இந்த தீய செயல்களை வழிபடுதல். தீய செயல்களை செய்வதும் அவற்றிற்கு செய்யும் வழிபாடே.

அதே போல் ஒரு கணவன் தன் மனைவியைத் தவிர வேறு பெண்ணுக்கு மனதில் இடம் கொடுத்தாலும், ஒரு மனைவி தன் கணவனைத்தவிர வேறு ஆணுக்கு மனதில் இடம் கொடுத்தாலும் அதுவும் சிலை வழிபாடே.

இறைவனை விட்டுவிட்டு பணம், மது மற்றும் சுகபோகங்களுக்கு இடம் கொடுத்தாலும் அதுவும் சிலை வழிபாடே.

யார் கேட்டாலும் தைரியமாக சொல்லுங்கள் சிலை வழிபாடு என்பது இதுதான் இதுவே பாவமாகும்.

நம் கத்தொலிக்க ஆலயங்களில் இருக்கும் திருச்சிலுவை, அன்னை மரியாள், புனிதர்களின் சொரூபங்கள் மற்றும் சிலுவைப்பாதை நிலைகள் எல்லாம் அடையாளங்கள்.

மேலே சொல்லிய தீய எண்ணம், தீய செயல் இந்த சிலை வழிபாடுகள் உடனே நீங்க வேண்டும். உள்ளத்தில் ஆண்டவர் இயேசு வாழ வேண்டும், வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

நற்கருணை நாதரை உட்கொள்ளும் நாம் புது எனர்ஜி பெற்று, புத்துயிர பெற்று பாவத்தில் இறந்து இயேசுவில் உயிர்க்க வேண்டும். அவரில் வாழ வேண்டும்.

அசுத்த ஆவியின் கனிகளான கெட்ட நடத்தை, மது, காமம், வெறுப்பு இன்னும் பல, இவைகளை விட்டு விட்டு பரிசுத்த ஆவியின் கொடைகளான நல்ல எண்ணம், நற்செயல், பிறரன்பு, தூய்மை, நேர்மை, குறிப்பாக பாவமின்மை, இன்னும் பல, இவைகளை பெற்று பிதா, சுதன், பரிசுத்த ஆவியை உள்ளத்தில் தாங்கி எப்போதும் இறைவழிபாட்டில் இருக்க வரம் தர ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுவோம் – ஆமென்

( நன்றி : தலைப்பு மற்றும் சில கருத்துக்கள், அன்னைவேளாங்கன்னி ஆலயம், அருட் தந்தை அந்தோனி ஜோசப்)