மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன்!

இது எந்த தீயாக இருக்கும் ? பழைய ஏற்பாட்டில் மோயிசனுக்கு இயேசு முட்புதரில் காட்சி கொடுத்தார். முட்புதர் எரிந்தது ஆனால் கருக வில்லை. தானியேலுக்கு கடவுள் நெருப்புத்தேரில் நெருப்பு மயமாக கனவில் காட்சி கொடுத்துள்ளார். பாகால் தெய்வத்தை வணங்கிய ஆகாஷ் மன்னனை எச்சரித்த எலிசா ( Please check name) வை கொலை செய்ய வந்த ஒரு தளபதி 50 வீரர்களையும் பிதாவிடம் வேண்டி அவர்களை நெருப்பால் எரித்தார். ( இந்த பகுதிக்கு நன்றி அன்னை வேளாங்கன்னி ஆலயம்)

புதிய ஏற்பாட்டில் இயேசு உயித்தபின்பு பதினொரு, அப்போஸ்தலர்கள், மகதலேன் மரியாள்,சலோமி மற்றும் பெண்சீடர்கள் அன்னை மரியாவோடு ஜெபிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் நெருப்பு வடிவில் வந்து அவர்கள் மேல் தங்குகிறார்.

ஆக பழைய ஏற்பாடு நெருப்பு பிதாவாகிய கடவுள். புதிய ஏற்பாடு நெருப்பு பரிசுத்த ஆவியானவர். இயேசு அதன் பின் அவர் பெற இருக்கிற இன்னொரு ஞானஸ்தானத்தைக் குறிப்பிடுகிறார். அது அவர் பெற இருந்த சிலுவைப்பாடுகளும் அவர் மரணமும். தன் ரத்தத்தை சிந்தி அவர் பெற்ற ஞானஸ்தானம். அந்த துன்பக்கலம் என்னும் ஞானஸ்தானத்தைப் பெறவும் அவருக்கு அவர் ஏற்கனவே பெற்றிருந்த தூய ஆவியானவரின் ( ஞானஸ்தானம் மூலம் பெற்றிருந்த ) துணையும் தேவைப்பட்டது.

ஆக இயேசு கூறிய தீ பரிசுத்த ஆவியே. அந்த பரிசுத்த ஆவி என்னும் தீ நம் இதயத்திற்குள் வந்துவிட்டால். பாவம் வெளியேறிவிடும். அப்போதே பிரிவினை ஆரம்பமாகிவிடும்.

சாத்தானைக்கொண்டு பாவிகளாக வாழ்பவர்களுக்கும், தூய ஆவியை உள்ளத்தில் வாங்கி கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களுக்கும்.

பாவத்திற்கும் தூய்மைக்கும் பகைமை. எங்கே மக்கள் பாவத்தை விடுத்து தூய ஆவியைப்பெற்று உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆகிறார்களோ அவர்களுக்கும், சாத்தாங்களுக்கும் பகைமை.

நன்மைக்கும், தீமைக்கும் பகைமை. இயேசுவுக்கும் சாத்தானுக்கும் பகை. ஆக ஒரே வீட்டில் வாழ்ந்தும் இயேசுவை ஏற்றுக்கொள்ளதவர்கள் இருக்கிறார்கள். இயேசு உயித்தபின்பு யூத கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவர் அல்லாத யூதர்கள் தொடங்கி இன்று வரை அவரின் வாக்கு நிறைவேறிகொண்டிருக்கிறது. கிறிஸ்தவக்குடும்பத்தில் வாழ்ந்து கொண்டே கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் கூட உண்டு)

சரி நான் பரிசுத்த ஆவியைப் பெற்று கிறிஸ்தவனாக மாறிவிட்டேன் என்று இறுமாப்புடனும் இருக்க முடியாது. நம் ஆன்மாவை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உள்ளத்தில் பரிசுத்த ஆவி தீயாக எரிந்து கொண்டிருக்கிறதா ? அல்லது அந்த தீ அணைக்கப்பட்டு பாவம் என்னும் இருள் சூழ்ந்திருக்கிறதா ?

ஆக சாத்தானை எதிர்க்க, பாவத்தை தவிர்க்க ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பரிசுத்த ஆவி என்னும் தீ தேவைப்படுகிறது. அந்த தீயைப் பெற ஆண்டவர் இயேசுவிடம் மன்றாடுவோம்.

இப்போது நற்செய்தியை வாசிப்போம்

" மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன்"

இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்! நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்.

நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்.

தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் எதிராகப் பிரிக்கப்படுவர்."

லூக்காஸ் 12 : 49-53