பாவ மன்னிப்பிற்கும், பாவ பரிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ?

பாவமன்னிப்பு நாம் அருட்தந்தையர்களிடம் செய்யும் பாவசங்கீர்த்தனம் மூலமாக நமக்கு கிடைப்பது. நாம் நினைக்கலாம் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. நாம் விண்ணகம் சென்றுவிடலாம் என்று. ஆனால் அது தவறு. பாவ மன்னிப்பின் மூலம் நாம் விண்ணகம் செல்ல முடியாது. உத்தரிக்கும் ஸ்தலம்தான் செல்ல முடியும். அங்கு சென்று நம் பாவங்களுக்கு பரிகாரம் செய்த பின்பு தான் விண்ணகம் அடைய முடியும். சரி உத்தரிக்கும் ஸ்தலத்தில் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்? சொல்ல முடியாது ஒரு சில அல்லது பல நூற்றாண்டுகள் கூட இருக்க நேரிடலாம். உத்தரிக்கும் ஸ்தலத்தின் வேதனையும் அதிகம், வேதனைக் காலமும் அதிகம்.

ஆனால் நாம் செய்யும் பாவங்களுக்கு இப்போதே அதாவது இந்த மண்ணுலகில், இந்த மானிட உடலோடு செய்துவிட்டால் உத்தரிக்கும் ஸ்தலம் “ Skip “ ஆகிவிடும். நாம் நேரிடையாக விண்ணகம் செல்லலாம்.

அதனால் நமக்கு நேரிடும் துன்பங்கள், கஷ்ட்டங்கள், நோய்வேதனைகள், இழப்பு, தவிப்பு அத்தனையையும் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும். பாவப்பரிகார திருப்பலி கூட ஒப்புக்கொடுக்கலாம்.

ஞானஸ்தானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவன் ஆன்மாவிற்கும் பொறுப்பு, மற்றவர் ஆன்மாவிற்க்கும் பொறுப்பு. முதலில் தன் ஆன்மாவை மீட்டு குறைந்த பட்சம் ஒரு சில ஆன்மாக்களையாவது மீட்க வேண்டும்.

அதற்க்காக சிலுவை சுமக்கவேண்டும். ஏன் மீண்டும் மீண்டும் சிலுவையை சொல்கிறோமென்றால், இப்போதைய கட்டாய தேவையாகிவிட்ட்து.

திவ்ய நற்கருணை, ஜெபமாலை, சிலுவை இந்த மூன்றும்தான் நம்மையையும், பிறரையும் காப்பாற்றும்.

அழிவிலிருந்து ஆன்மாக்களை காக்க நம் சிலுவைகளால் ஆன்மாவை சுத்தமாக்குவோம்.

அதனால்தான் இயேசு ஆண்டவர் சொல்கிறார், “ என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே வெறுத்து தன் சிலுவையை தூக்கி கொண்டு என்னைப் பின் செல்லட்டும் என்று.

சிலுவையை ஏற்போம் ஆன்மாவைக் காப்போம்!