படைப்புகளே நம் ஆண்டவரைப்


படைப்புகளே நம் ஆண்டவரைப்

பாடுங்களே நீங்கள் பாடுங்களே (2)

அருஞ்செயல் எனக்கு அவர் செய்தார்

ஆனந்தமே என்னில் ஆனந்தமே


1. அன்பீந்தார் அருளீந்தார் பண்பும் பணிவும் அவரளித்தார்

யார் என்னைக் கைவிடினும்

ஆண்டவர் என்னை அழைக்கின்றார்

ஆஹா இறைவனின் அன்பினுக்கு

இந்த உலகினில் உவமையுண்டோ (2)


2. மனம் கலங்கி பரிதவித்தேன் நிம்மதி மனதில் எனக்களித்தார்

மாசுடன் நான் நிற்கையிலே மன்னிப்பு எனக்கு அவரளித்தார்

ஆஹா இறைவனின் அன்பினுக்கு

இந்த உலகினில் உவமையுண்டோ (2)