எழுந்திடுவீர் இறைமக்களே குழுமிடுவீர் குருகுலமே
பணிந்திடுவீர் இறைபதமே பரமனுக்கே பலியிடவே (2)
1. ஆலய வாயில் நுழைந்திடுவீர் ஆண்டவர் பாதம் அணுகிடுவீர் -2
அருஞ்செயல் செய்த ஆண்டவர்க்கே - 2
ஆனந்த கீதம் பாடிடுவீர் - 2
2. தீபத்தை எரியச் செய்திடுவீர் தூபத்தைப் புகையச் செய்திடுவீர் -2
தீபத்தின் ஒளிபோல் திகழ்ந்திடுவீர் -2
தூபத்தின் மணம் போல் திகழ்ந்திடுவீர் -2