உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உன் திருப்புகழ் பாடியே உன் பீடம் வருகின்றோம்

உன் இதயக் கோவில் தன்னில் குடியிருக்கவே

எம் கரங்களை உயர்த்தியே உன் பாதம் பணிகின்றோம்

எம் இறைவா என்றும் நீர் எம்மைக் காப்பதால்


1. .கருணை தெய்வம் உன்னில் என்னைக் காண விழைகின்றேன்

கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் (2)

கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் (கெட்ட)-2

கண்ணிமைப் போல என்றும் எம்மைக் காக்கின்றாய்


2. அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே

அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே (2)

அருளும் உன் அன்பினை நான் மறந்தாலும் (தினம்) -2

அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்