வாருமய்யா இறை வாருமய்யா தாருமய்யா உம் கொடை தாருமய்யா


வாருமய்யா இறை வாருமய்யா

தாருமய்யா உம் கொடை தாருமய்யா

ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே

ஆற்றலும் வல்லமையும் ஊற்றித் தாருமய்யா

எனக்கு ஆற்றலும் வல்லமையும் ஊற்றித் தாருமய்யா


1. ஆதியிலே நீரின் மீது அசைந்தாடினீர்

ஆண்டவரின் படைப்பையெல்லாம் அபிஷேகம் செய்தீர்

அனைத்து உலகுக்கும் என்னை அபிஷேகம் செய்யும்

நற்செய்தியாளனாய் அபிஷேகம் செய்யும்


2. என் உடலும் என் உள்ளமும் உம் ஆலயமே

இறங்கி வந்து வாசம் செய்யும் ஆவியானவரே

வாசம் செய்யுமய்யா எனக்குள் வாசம் செய்யுமய்யா

இயேசுவின் சாட்சியாய் வாழ எனக்குள் வாசம் செய்யும்


3. பெந்தகோஸ்தே நாளினிலே இறங்கி வந்தவரே

அப்போஸ்தலர் எல்லோருக்கும் பெலன் தந்தவரே

இயேசு நாமத்தினால் எனக்கு பெலன் தாருமய்யா

உண்மையாய் நான் வாழ எனை நாளும் நடத்தும்