தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ தனது பிள்ளை அவள் மறப்பாளோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தாய்க்கு அன்பு வற்றிப் போகுமோ

தனது பிள்ளை அவள் மறப்பாளோ

தாய் மறந்தாலும் நான் மறவேனே

தயையுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே


1. குன்று கூட அசைந்து போகலாம்

குகைகள் கூட பெயர்ந்து போகலாம் (2)

அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே

அசைவதில்லை பெயர்வதில்லையே (2)


2. தீ நடுவே நீ நடந்தாலும் ஆழ்கடலைத் தான் கடந்தாலும் -2

தீமை ஏதும் நிகழ்வதில்லையே தீதின்றியே காத்திடுவேன் நான் -2