நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும் நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்

நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்

அரணும் நீயே கோட்டையும் நீயே

அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே


1. நீ வரும் நாளில் அமைதி வரும் உன்

நீதியும் அருளும் சுமந்து வரும்

இரவின் இருளிலும் பயம் விலகும் உன்

கரத்தின் வலிமையால் உயர்வு வரும்

கால்களும் இடறி வீழ்வதில்லை

தோள்களும் சுமையால் சாய்வதில்லை

என் ஆற்றலும் வலிமையும் நீயாகும் -2


2. விடியலைத் தேடும் விழிகளிலே - புது

விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ

பால் மனம் தேற்றும் தாயும் நீ - என்

பால்வெளி பயணத்தில் தாரகை நீ

அருட்கடல் கடந்திடும் ஆயனும் நீ

அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ

என் மீட்பரும் நேசனும் நீயாகும் - 2