நன்றி சொல்லிப் பாடிடுவோம் நன்மை செய்த தேவனையே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நன்றி சொல்லிப் பாடிடுவோம்

நன்மை செய்த தேவனையே

நாளெல்லாம் காத்து நடத்தும் இறைவனை

நலமெல்லாம் ஈந்து பகிரும் நாதனை


1. கரத்தில் நமது பெயரைப் பொறித்து

கண்ணின் மணியாய்க் காக்கின்றார்

கல்லிலும் கால்கள் மோதாதபடியே

கரம் பிடித்து நம்மை நடத்துகின்றார் (2)

வலப்புறம் ஆயிரம் விழுந்தாலும் இடப்புறம் ஆயிரம் விழுந்தாலும்

தீமைகள் அணுகாது காத்திடுவார்


2. கருணையும் இரக்கமும் பொழிந்தே நாளும்

தயவுடன் நம்மை நடத்துகின்றார்

நன்மைகளால் நம் வாழ்வை நிரப்பி

நலமுடன் நம்மை நடத்துகின்றார் (2)

அவரே அரணாய் இருக்கின்றார் அவரே புகலிடமாய் உள்ளார்

அவரை எந்நாளும் போற்றிடுவோம்