♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நன்றி சொல்லி நாளும் பாடுவோம் - கோடி
நன்மை செய்யும் இயேசு ராஜனை (2)
நமது வாழ்க்கையே உயர்ந்த நன்றியாம் - 2
நன்மை நெறியில் நாளும் நடந்து
நலன்கள் யாவும் நட்பில் பகிர்ந்த
1. விண்ணும் மண்ணுமே காணும் யாவுமே
கடவுள் தந்த கொடைகள் அல்லவா
வலிமை இழந்தவர் வாழ்வில் வசந்தம் பெறுவதும்
வள்ளல் இயேசு தயவில் அல்லவா (2)
அமைதி வரும் அருள் நிறையும் அவர் வரவில் புது உறவில்
அன்னை போல அன்பு காட்டி
நம்மைக் காக்கும் தேவன் பெயரை
2. கவலை யாவுமே கலைந்து போனதே
கண்ணைப் போல என்னை இயேசு காப்பதால்
சோகமில்லையே இனி சுகமே எல்லையே
தேற்றும் தெய்வம் தேடி வந்ததால் (2)
சுமை சுமக்கும் தோள்களுக்கு சுகம் தருவார் துணை வருவார்
அச்சம் நீக்கி அன்பு தந்து
அருளைப் பொழியும் தேவன் புகழை