ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து

அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி

அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி

அன்பாகத் தந்தோம் என் நேசத் தந்தாய்

அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம்பலி -2


1. நட்பு எனும் பூச்சூடி நெஞ்சங்கள் ஒன்றித்து

அப்பத்தின் வடிவத்தில் அன்புடன் எமைத் தந்தோம் (2)

உம் பாசப் பலியில் பகையெல்லாம் மறைய

வெளிவேடம் கலைந்து நிஜவாழ்வு மலர

மலர்ப்பாதம் படைத்தோம் அடையாள வடிவில்

அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம்பலி -2


2. தியாகமதை மனம்தேக்கி நேசத்தில் நிதம் நிலைத்து

திராட்சையின் வடிவத்தில் நிறைவுடன் எமைத் தந்தோம் (2)

இனிவாழும் வாழ்வின் பொழுதெல்லாம் உமதாய்

இதயத்தின் சுவாசம் இறையாட்சிப் பணிக்காய்

அருள்வேண்டி வந்தோம் வாழ்வாகும் பலியில்

அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம்பலி -2