ஆனந்த ராகம் பாடியே வந்தோம் ஆண்டவன் பீடத்திலே கானங்கள் முழங்க காணிக்கை தந்தோம் தேவனின் பாதத்திலே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆனந்த ராகம் பாடியே வந்தோம் ஆண்டவன் பீடத்திலே

கானங்கள் முழங்க காணிக்கை தந்தோம் தேவனின் பாதத்திலே (2)

இறைவா எம்மை ஏற்பாய் அருள்வாய் உம்மைத் தருவாய் -2


1. மலர்கள் மலர்ந்திட மணமும் வீசிட இதயம் நிறையுதே

கதிர்கள் வளர்ந்திட கனிகள் விளைந்திட உதயம் பெருகுதே

நன்றி எம் இறைவா உம் அருள் வரங்களுக்காய் (2)

வாழ்வும் உமதே வளமும் உமதே உம் பாதம் பணிக்கின்றோம்


2. உயர்வும் தாழ்வும் உழைப்பும் களைப்பும் மனித வாழ்வன்றோ

அன்பு பாசம் பகைமை வெறுப்பும் தினமும் நிகழ்வன்றோ

ஏற்பீர் என் இறைவா எம் வாழ்வு முழுவதுமே - 2

வாழ்வும் உமதே வளமும் உமதே உம் பாதம் பணிகின்றோம்