காத்திருக்கும் கண்களுக்கு காட்சியாகக் காலமெல்லாம் நீ வேண்டும் இயேசுநாதா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காத்திருக்கும் கண்களுக்கு காட்சியாகக்

காலமெல்லாம் நீ வேண்டும் இயேசுநாதா (2)


1. இதயத்தின் துடிப்பினிலே எந்நாளும் - உன்

இதமான பேர் என்றும் கேட்க வேண்டும் (2)

பருவத்தின் காலங்கள் எல்லாம் நான் - உன்

உருவத்தின் எழில் ஒன்றே காண வேண்டும் (2)


2. நிலையற்ற இன்பங்கள் நான் மறந்து - உன்

நினைவாக எந்நாளும் வாழவேண்டும் (2)

குறையற்ற செல்வத்தை நான் இன்று - என்

கறைபட்ட இதயத்தில் ஏந்த வேண்டும் (2)