இயேசுவே என் நண்பனே ஏழைக் குடிலில் எழுந்து வா


இயேசுவே என் நண்பனே ஏழைக் குடிலில் எழுந்து வா

மனுமகனே என் இளவரசே

என் இதயக் குடிலில் தவழ்ந்து வா


1. நன்மைகள் செய்வதில் என்னையே மறந்து

பிறரின் வளர்ச்சிக்காய் வாழுவேன்

உன்னையே நாடி உண்மைக்கு வாழும்

உயர்வு மனமே போதுமே

கன்னி ஈன்ற திருமகனே காலம் தந்த தனிமகனே

கருணை இருப்பிடம் நீயன்றோ

கண்ணீர் துடைப்பதுன் கரமன்றோ


2. ஒளியினைத் தேடும் செடியெனத் திகழும்

உனதருள் பார்வைக்காய் ஏங்குவேன்

நம்பிக்கையில்லா மனங்களில் உனது

நலந்தரும் செய்தி ஆகுவேன்

கடவுள் மனிதனாய் வந்தவனே

மனிதனில் இறைவனைக் கண்டவனே

ஒன்றே அனைவரும் என்றவனே

உலகினில் பேரின்பம் ஆனவனே