இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் சத்திய ஜீவ வழியான தெய்வம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இஸ்ராயேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம்

சத்திய ஜீவ வழியான தெய்வம்

நடுவராய் பூமியில் பிறந்த அன்பு தெய்வம்

நித்திய வாழ்வு தருகின்ற தெய்வம்

ஆதி பிதாவே தெய்வமே உமது இராஜ்ஜியம் வருகவே

உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேறவே


1. செங்கடலில் நீர் அன்று பாதை பிளந்தீர்

பாலையில் மக்கட்கு மன்னா பொழிந்தீர்

கடும் வெயிலில் மேக நிழலானீர்

இருளில் தீப ஜோதியாய்

சீனாய் மாமலை மேலே நீர்

நீதிப்பிரமாணங்கள் பகிர்ந்து தந்தீர்


2. மனிதனாய் பூமியில் வந்து பிறந்தீர்

இறுதியில் எமக்காய் உயிரைத் தந்தீர்

திருவுடலை எமக்குத் திருவுணவாய்

இவ்வுலகத்தின் ஜீவனாய்

வழியும் உண்மையும் ஆனவரே

உம் திருநாமம் வாழ்கவே