எந்தன் உள்ளம் தந்தேன் தேவனே அது உந்தன் அன்பில் வளர வேண்டுமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் உள்ளம் தந்தேன் தேவனே அது

உந்தன் அன்பில் வளர வேண்டுமே (2)

மாறும் மனித வாழ்வு அதில் மாண்பைத் தேடினேன்

மாறா உறவை வளர்க்க என் இதயம் தருகின்றேன்

மனித நேயம் வளர வேண்டும் என்னை அளிக்கின்றேன்


1. வேகமான உலகம் இதில் ஏது நிம்மதி

பீடம் வந்து படைத்தேன் என் சொந்த சங்கதி

பாரமான மனது இதுதானோ என் கதி

நேரே வந்து சேர்ந்தேன் உன் பாத சந்நிதி

போற்றி சாற்றுவேன் ஒரு புகழ்ச்சிக் காணிக்கை

ஏற்று நீ மாற்றுவாய் புதிய காணிக்கை

இறைவனே தலைவனே நானே காணிக்கை


2. நேர்மையான உழைப்பே உமக்கேற்ற காணிக்கை

நீதியான வாழ்வே நீர் கேட்கும் காணிக்கை

ஏழை நெஞ்சின் நிறைவே உயர்வான காணிக்கை

வீதி எங்கும் மலரும் நல் உறவின் காணிக்கை

போற்றி சாற்றுவேன்...