எதை நான் தருவேன் இறைவா - உன் இதயத்தின் அன்பிற்கீடாக

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எதை நான் தருவேன் இறைவா - உன்

இதயத்தின் அன்பிற்கீடாக


1. குறைநான் செய்தேன் இறைவா - பாவக்

குழியில் விழுந்தேன் இறைவா (2)

கறையாம் பாவத்தை நீக்கிடவே - 2

நீ கல்வாரி மலையில் இறந்தாயோ


2. பாவம் என்றொரு விசத்தால் - நான்

பாதகம் செய்தேன் இறைவா (2)

தேவனே உம் திருப்பாடுகளால் - 2 எனைத்

தேற்றிடவே நீ இறந்தாயோ