இறைவா வா விரைவாய் வா என்னுள்ளத்தின் தெய்வமே வா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவா வா விரைவாய் வா

என்னுள்ளத்தின் தெய்வமே வா (2)


1. எந்தன் சிந்தனை உமக்கன்றோ

சிந்தை சிறக்க எழுந்து வா -2

எழுந்து வா -4


2. எந்தையும் தாயும் நீயன்றோ

எந்தன் இதயம் மகிழ வா -2

மகிழ வா -4


3. ஒளியும் உயிரும் நீயன்றோ

வழியில் இருளை நீக்க வா -2

நீக்க வா -4


4. பாவத்தில் புரண்டு மயங்கினேன்

தவத்தில் உன்னடி பணிகின்றேன் (2)

பணிகின்றேன் -4