நான் வாழ்ந்ததும் மண்ணில் வாழ்வதும் உன்னாலன்றோ நான் தாழ்வதும் மண்ணில் வீழ்வதும் உன்னை மறந்தாலன்றோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் வாழ்ந்ததும் மண்ணில் வாழ்வதும் உன்னாலன்றோ

நான் தாழ்வதும் மண்ணில் வீழ்வதும் உன்னை மறந்தாலன்றோ (2)

என் வாழ்விலே நீ செய்த நன்மைகள் கோடி என்று

தினமும் பாடும் எந்தன் மனம்


1. தனிமையில் நான் தவித்து நின்றேன்

தாங்கி அணைத்துக் கொண்டாய்

இருளும் புயலும் சூழ்ந்தபோதும் தோளில் சுமந்து கொண்டாய்

வாழ்வு கொடுக்கும் நண்பனாகக் கவலை என்னில் தீர்த்தாய்

சொந்தம் பந்தம் எல்லாம் நீயே என்று ஏற்றுக்கொண்டாய்

வாழ்வின்பொருளைத் தந்தாய் புது விடியல் காணச் செய்தாய் -2


2. வாழ நீ வழிகாட்டினாய் என் வாழ்வில் நன்றி சொல்வேன்

நான் உயர நல் உறவு தந்தாய் உவந்து நன்றி சொல்வேன்

பொய்மை மறந்து உண்மை உணர்ந்தால்

உறவு வளரும் என்றாய்

இருளை அழித்து ஒளியைத் தந்தால் வாழ்வு மலரும் என்றாய்

வாழ்வின்பொருளைத் தந்தாய் புது விடியல் காணச் செய்தாய் -2