நான் இனி நீ என வாழ்ந்திடத்தான் (உன்) நினைவினில் நாள் எல்லாம் நான் உனில் ஆழ்ந்திடத்தான்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் இனி நீ என வாழ்ந்திடத்தான் (உன்) நினைவினில்

நாள் எல்லாம் நான் உனில் ஆழ்ந்திடத்தான் (2)

நெஞ்சம் வந்து தஞ்சம் தரும் உன் வார்த்தைகள்

நேசி எனப் பேசி எனை உனதாக்குமே (2)


1. நலமான எண்ணங்களால் மகிழ்வான வார்த்தைகள் மலரும்

மகிழ்வான வார்த்தைகளால் உயர்வான செயல்கள் பிறக்கும்

உயர்வான செயல்களினால் உயிருக்குள் ஒழுக்கம் தவழும்

உயிரான ஒழுக்கத்தினால் உலகுக்குள் வாழ்க்கை சிறக்கும்

எந்தன் எண்ணம் வார்த்தை செயலால் உன்னில் உறவாடவே -2


2. அன்பான வாழ்க்கையினால் அழகான நேயம் நிலவும்

அழகான நேயத்தினால் அகந்தேடும் நீதியும் நிலைக்கும்

அகந்தேடும் நீதியினால் இகந்தேடும் அமைதி நிகழும்

இகந்தேடும் அமைதியினால் சுகமான ஆனந்தம் நிறையும்

அன்பின் வாழ்வும் வாழ்வின் பொருளும் எந்தன் பாடலாகுமே -2