ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் நம் ஆண்டவன் தோன்றிவிட்டார்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் - நம்

ஆண்டவன் தோன்றிவிட்டார் - இயேசு

ஆண்டவன் தோன்றிவிட்டார்

காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்

கர்த்தர் தோன்றிவிட்டார் - நம்

கர்த்தர் தோன்றிவிட்டார்


1. புனிதமாமரி புண்ணியவதியின்

புதல்வனாக பூமியில் தோன்றி

கல்லிடை ஓரத்தில் கடுங்குளிர் சாரலில்

கந்தையின் நடுவினிலே - நம்

கர்த்தர் தோன்றிவிட்டார்


2. யூதே நாட்டின் சந்ததியாக

சூசையப்பரின் சுந்தர மகனாய்

சுத்த மரியிடம் மனித குலத்திலே

தேவன் தோன்றிவிட்டார் - இயேசு

பாவ மன்னிப்பு தருகின்ற தேவன்

பகலும் இரவாய் திகழ்கின்ற தேவன்

காற்றாய் மழையாய் கடலாய் அலையாய்

ஊற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்

உத்தமர் தோன்றிவிட்டார் - இயேசு

உத்தமர் தோன்றிவிட்டார்