பொன்னும் வெள்ளைப் போளமும் அரசர் தந்த காணிக்கை

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


பொன்னும் வெள்ளைப் போளமும்

அரசர் தந்த காணிக்கை

அப்ப ரசமும் பலிகளும் ஏழை யாம் தரும் காணிக்கை


1. ஆடு மேய்க்கும் ஆயர்கள் அகில ஆயனைக் கண்கொண்டார் -2

மாடு வாழும் குடிலிலே ஆட்டுக்குட்டியைத் தந்தாரே


2. ஏழைக்கைம்பெண் காணிக்கை ஏத்திப்போற்றி ஏற்கிறேன் - 2

எளியோர் எங்கள் காணிக்கை இயேசுபாலா ஏற்பீரே


3. பொருளால் நிறைந்த வாழ்க்கை பொருளில்லாமல் ஆனதே - 2

அருளால் நிறைந்து வாழ்வதே அப்பமாக ஆகுமே