ஆகாயம் மண்ணிலா அமுதான வெண்ணிலா இளந்தென்றல் பாடும் பண்ணிலா


ஆகாயம் மண்ணிலா அமுதான வெண்ணிலா

இளந்தென்றல் பாடும் பண்ணிலா

ஆனந்தம் கண்ணிலா பேரின்பம் வானிலா

இறைமகன் இன்று என்னிலா ஓ

இறைமகன் இயேசு என்னிலா

முகிலே முகிலே செல்வாயா

விண்ணின் மகிழ்வை சொல்வாயா

மலரே மலரே வருவாயா

மன்னன் பாதம் தொடுவாயா


1. உயிரே என் உயிரே என்

தலைவன் உயிரில் கலந்திட வா

உறவே என் உறவே என்

நாயகனோடு வாழ்ந்திட வா

உயிரே உயிரே உயிரே உயிரே

தலைவன் உயிரில் கலந்திட வா

உறவே உறவே உறவே உறவே

நாயகனோடு வாழ்ந்திட வா

உயிரே உயிரே உறவே உறவே

தனனம் தனனம் தனனம் தனனம்

என் இயேசு என்னோடு வாழ்ந்தால் போதும்

எனக்கினி என்ன வேண்டும்


2. மலரே ஓ மலரே உன்

ஆண்டவன் புகழைப் பாடிட வா

காற்றே பூங்காற்றே உன்

புண்ணியன் மகிழ வீசிட வா

மலரே மலரே மலரே மலரே

ஆண்டவன் புகழைப் பாடிட வா

காற்றே காற்றே காற்றே காற்றே

புண்ணியன் மகிழ வீசிட வா

மலரே மலரே காற்றே காற்றே

தனனம் தனனம் தனனம் தனனம்

எனையாளும் என் இயேசு என்னில் வந்தால்

எனக்கினி என்ன வேணும்