வசந்த ராகம் பாடுவோம் இந்த புனிதமான விருந்தினில் ஆனந்த கீதங்கள் பாடிப் போற்றுவோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


வசந்த ராகம் பாடுவோம் இந்த புனிதமான விருந்தினில்-2

ஆனந்த கீதங்கள் பாடிப் போற்றுவோம் ஆ...


1. விண்வெளி போற்றிப் பாடும் எந்தன் மன்னன் வருகையில்

காற்றும் ராகம் பாடும் எந்தன் இதயம் எழுகையில்

கடல் அலைகள் கவி பாடும் எந்தன் மீட்பர் புகழினை

அவரன்பு நம்மைக் காக்கும் அவரைப் போற்றுவோம் நாம்


2. தன் ஒளி வீசும் நிலவும் எந்தன் இதய இயேசுவை

பாய்ந்து ஓடும் நதியும் தன்னைப் படைத்த தேவனை

உறைபனியும் தென்றல் காற்றும் இன்று இணைந்து பாடுமே

அவர் வரவால் உள்ளம் நிறைந்து அவரைப் போற்றுவோம் நாம்