நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம் நன்மை கோடி செய்யும் நல்ல தேவனை


நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவோம்

நன்மை கோடி செய்யும் நல்ல தேவனை 2

உண்மையின் உறவில் நாளுமே வளர

தமது அருளை நமக்குத் தருகின்றார் எந்நாளுமே


1. வறண்ட பூமி வான் மழையைக் காணச் செய்பவர்

வரமளித்து வாழ்வினிலே இனிமை சேர்ப்பவர் - 2

நீதியோடு யாவருக்கும் தீர்ப்பளிப்பவர் - 2

பாவி கூட வருந்தும் போது மன்னித்தருள்பவர்

இரக்கமுள்ளவர் இனிமையானவர்

இன்றும் என்றும் மாறாமல் அன்பு செய்பவர்

நன்றி நன்றி நன்றி இயேசுவே - 4


2. காடு கழனி வயலையெல்லாம் விளையச் செய்பவர்

நாடு வீடு போற்ற நம்மை மகிழச் செய்பவர் - 2

ஏழை சனம் காக்க இந்த பூமி வந்தவர் - 2

வாழையடி வாழையாக வாழவைப்பவர் - இரக்கமுள்ளவர்...